திருமணத்தடையா? முகம் பார்க்கும் கண்ணாடி போதும்..!

Default Image

திருமணத்தடையை நீக்க முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து எளிய பரிகாரம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

முகம் பார்க்கும் கண்ணாடி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. கண்ணாடி நல்ல சக்திகளை ஈர்த்து கொடுக்க கூடிய பொருள். அதனால் இதிலிருந்து வரக்கூடிய ஆற்றல் கொண்டு நமக்கு பலவித நன்மைகள் நடைபெறும். மேலும், முகம் பார்க்கும் கண்ணாடியை வீடு பூஜை அறையில் சிறிய அளவிலாவது வைப்பது மிகவும் நன்மை அளிக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் பித்ரு தோஷம் இருப்பவர்கள் கண்ணாடியை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடுவதன் மூலமாக அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. மேலும், வீட்டு வாசலில் கண்ணாடியை மாட்டி வைத்தால் கண் திருஷ்டி அகலும்.

இப்படிப்பட்ட கண்ணாடியை வைத்து திருமண தடையை எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் வீட்டில் யாருக்கு திருமணம் நடைபெறவில்லையோ அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் கையால் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்கி வந்து வீட்டில் மாட்டி வையுங்கள். மேலும், இந்த கண்ணாடியில் ‘ஆறுமுகன்’ படத்தை வாங்கி அதில் ஒட்டி வைக்க வேண்டும். அந்த முருகன் படத்தில் ஆறுமுகமும், 12 கைகளும் இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

இந்த படத்திற்கு முன்பு தினமும் தூங்க செல்லும் முன்பு மனதார ஆறுமுகப்பெருமானை வேண்டி கொள்ள வேண்டும். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள். பின்னர் தூங்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து 90 நாட்கள் நீங்கள் வேண்டி கொள்ளுங்கள். மேலும், காலை தூங்கி எழுந்த உடனேயே கண்ணாடியில் இருக்கும் ஆறுமுகனை மனதார வேண்டி கொள்ள வேண்டும். இதுபோல் 90 நாட்கள் செய்து பாருங்கள். விரைவிலேயே திருமணம் கைக்கூடி வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Thoothukudi Perumal Temple
Kulasekaranpattinam Surasamhara festival_11zon
Vijayadashami 2024
K.K.S.S.R.Ramachandran
Air India Express Flight
Train Accident - Rahul Gandhi