Breaking:நாளை 7 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்- வானிலை ஆய்வு மையம்!

Breaking: Heavy rain with thunder and lightning in 7 districts tomorrow- Meteorological Center!

சென்னை:தமிழகத்தில் நாளை தஞ்சை,திருவாரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை,மயிலாடுதுறை,கடலூர், ராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,நாளை காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள்,தென் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node