சென்னை : இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை ....!

Chennai has been issued a Red Alert today and tomorrow.

சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெரும்பாலும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னைக்கு இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.