நிவர் புயல் எதிரொலி: சென்னையில் 24 விமான சேவைகள் ரத்து .!

Chennai Airport has announced the cancellation of 12 flights from Chennai and 12 flights to Chennai due to Nivar storm.

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 விமான சேவைகளையும்,சென்னைக்கு வரும் 12விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் உள்ளதாகவும் ,அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அப்போது நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவிருந்த 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதே போன்று சென்னையிலிருந்து பிற இடங்களுக்கு புறப்பட இருந்த 12 விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.