தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீர் தீ விபத்து!

A fire broke out at the Tambaram railway station workshop premises in Chennai this morning.

சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இதுவரை விபத்துக்கான காரணங்கள் முழுவதுமாக கண்டறியப்படவில்லை. ஆனால் இந்த விபத்து நடந்ததற்கு அங்கு காட்டப்பட்டுள்ள மர பொருட்களும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ரயில்வே பராமரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய கிரீஸ் பொருட்கள் மற்றும் மரப் பொருட்கள் அப்பகுதியில் சேகரிக்கப்பட்டு வருவதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இது தானா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.