#Alert:வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – கனமழைக்கு வாய்ப்பு இருக்குமா?..!

The Chennai Meteorological Department has forecast a new depression in the Bay of Bengal tomorrow.

சென்னை:வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால்,இன்று முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,புதுச்சேரி,காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்க கடல்- நிலக்கோடு பகுதியில் முதல் 19 ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.