3 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளீர் நீதிமன்றம் உத்தரவு.

பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளீர் நீதிமன்றம் உத்தரவு.

தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சியான தனது சிக்ஸ் பேக் கொண்ட புகைப்படம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை மயக்கி நல்லவன் போல நடித்து மாட்டிக்கொண்டவர் தான் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த காசி.

இவரது உண்மை தன்மை அறிந்த மருத்துவம் பயின்றுள்ள காதலி காவல் துறையினருக்கு புகார் அளிக்கவே, வரிசையாக வந்து குமிந்தது அடுத்தடுத்த புகார்கள்.

பல பெண்களை ஏமாற்றியதாக போடப்பட்ட வழக்கை தொடர்ந்து, கந்து வட்டி புகாரும் அண்மையில் கொடுப்பட்டது. இந்நிலையில், இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மகளீர் நீதிமன்றம் காவல் துறையினருக்கு உத்தரவு கொடுத்துள்ளது.