இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

Kanyakumari district have been given a local holiday today (Dec. 24) ahead of Christmas.

கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை  கொண்டாடப்படவுள்ளது.

பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை என்றாலும்,ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் முன்னதாகவே டிச.24 ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாக்குமரி மாவட்டத்தில் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர்  விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி,கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏதுவாக ஜனவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.