ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை – துரிதமாக காப்பாற்றிய 14 வயது சகோதரி!

Praise has been heaped on the 14-year-old girl who quickly saved her sister's hair by falling into a deep well.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார்.

அதன் பின்பாக சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அப்பகுதிக்கு வந்து சிறுமியை விரைந்து காப்பாற்றியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் ஆள்துளை கிணறு உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தங்கை விழுந்ததும் புத்திசாலித்தனமாக யோசித்து தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.