குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை சிபிஎம் மாநிலச்செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல்...!!

To investigate the KuranganiForestFire, a high level inquiry committee should be set up, 25 lakhs per family for the deaths and a government job for a home. For the treatment of burns, Rs 5 lakh will be given relief. Cpim Secretary, Balakrishnan met the waiter who was injured in the monkey forest fire

தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை  சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம்,லாசர்,மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உள்ளிட்டு அனைவரும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.