தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்டியப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்புக்கு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் 11 ஆம் வகுப்புக்கு மே 9 […]
ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 11ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், செய்முறை தேர்வு மதிப்பெண்களை பள்ளிகள் வரும் மே 4-ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு. நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவும், இறுதிக்கட்ட கலந்தாய்வு ஜூலை 20 அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் […]
பள்ளிகளில் சமீப நாட்களாக ஆசிரியர்களுக்கு மாணவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க […]
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான இளநிலை, முதுநிலை பட்ட, பட்டய, சான்றிதழ் படிப்பு தேர்வுகள் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. தொலைநிலை கல்வி திட்ட படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை, ஹால் டிக்கெட் ஆகியவை http://www.ideunom.ac.in/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ(CBSE) 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றன.மேலும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22, 2021 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன. இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்புவது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும் என்றும்,இது தொடர்பாக புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், […]
10,11 மற்றும் 12ம் வகுப்பு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற குழு அட்டவணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 5 […]
10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 நடைபெற உள்ளது. மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக உள்ளதாக தகவல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களை,தற்போது பணியாற்றி வரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை,அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,வருகின்ற பட்ஜெட் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி […]
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு […]
தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்கள் மறுஉத்தரவு வரும் வரை 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு. பணிப்பளுவின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக,கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பணிப்பளு காரணமாக தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ […]
வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் […]
சென்னை:தமிழகத்தில் இன்று ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
தெலங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் தற்போது அதிக அளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்திருந்தார். இருப்பினும் கொரோனா […]
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா அதிகளவில் பரவி வருவதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை […]
டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு […]