அனுபவம் வாய்ந்த இன்ஜினியரிங் பட்டதாரிகளே ... ஐடிபிஐ வங்கியில் அட்டகாசமான வேலை ..!

ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு :  ஐடிபிஐ வங்கியில் தற்போது தலைமை தரவு அதிகாரிக்கான (Chief Data Officer) காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வேலை

IDBI Bank

ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு :ஐடிபிஐ வங்கியில் தற்போது தலைமை தரவு அதிகாரிக்கான (Chief Data Officer) காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை என முழு விவாரங்களை குறித்து தற்போது பார்க்கலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி

03/07/2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

17/07/2024

காலியிட விவரங்கள் :

1 – தலைமை தரவு அதிகாரி (Chief Data Officer)

சம்பளம் :

இந்த வேலைக்கான மாத சம்பளமானது வங்கியின் சந்தை நிலவரம் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் இதற்கு முன் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

கல்வி தகுதி :

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டதில் (Master அல்லது Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அறிவியில் துறையில் பட்டதாரி படிப்பும் (Graduate in science)அதனுடன் MCA துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது வரம்பு

40 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு

55 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியர்த்தப்படும் இடம் :

மும்பை

தேர்தெடுக்கும் முறை :

விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை ஷார்ட்லிஸ்ட் (Shortlist) மூலம் தேர்வு செய்து நேர்முகத்தேர்வு மூலமாக  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஐடிபிஐ வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த தலைமை தரவு அதிகாரி பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://www.idbibank.in/index.aspxஎன்ற இணையத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அல்லது இந்த வேலைக்கான விண்ணப்பபடிவத்தை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள இந்தPDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தை தவறில்லாமல் சரியாக பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து இந்த மின்னஞ்சல்[email protected]மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

குறிப்பு :- விண்ணப்பக்கட்டணம் கிடையாது.