இன்றைய பெண்களுக்கான முக்கிய பிரச்சனைகளின் ஒன்று முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். பெண்களுக்கு அழகே இந்த முடி தான். இந்த முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்வது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில், செம்பட்டையாக உள்ள முடியை கருமையாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
ஆமணக்கு எண்ணெய்
unknown nodeமுடி செம்பட்டையாக உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தலையில் நன்கு மசாஜ் செய்து பூசிக் கொள்ள வேண்டும். அதன் பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி கருமையாக மாறி விடும்.
ஆலிவ் ஆயில்
unknown nodeஆலிவ் ஆயிலை நன்கு தலையில் தேய்த்து மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால், முடி கருமையாக வளரும்.
முட்டை வெள்ளை கரு
unknown nodeவாரம் இரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, அதன்பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெய்
unknown nodeதேங்காய் எண்ணெயுடன், கேரட் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கருமையாக வளரும்.