லைஃப்ஸ்டைல்

Blood Pressure : முருங்கைக்கீரை BP-யை குறைக்குமா…? வாங்க பார்க்கலாம்…!

Published by
லீனா

இன்று பெருமாம்பாலும்  40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது.  உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் என்பது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும்போது, ​​தமனிகளில் ஏற்படும் அழுத்ததின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் 

உயர் இரத்த அழுத்த பிரச்னை வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதே சமயம் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் ஏற்கனவே யாருக்காவது இந்த பிரச்னை இருந்தாலும் உயர் இரத்த அழுத்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.

முருங்கை கீரையின் நன்மைகள் 

முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. முருங்கை கீரையில் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி? 

தேவையானவை 

  • முருங்கை கீரை – 5 கொத்து
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 5
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக் கீரையை உருவி போட வேண்டும். அதில் சீரகம், சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும்வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.  உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை காலையில் இந்த முருங்கைக்கீரை சூப்பை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும். இது உயர் ரத்த அழுத்த பிரச்சனையை மட்டும் அல்ல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Published by
லீனா

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago