இந்த பால் கிடைச்சா விடாதீங்க! அதிலேயும் பெண்கள் விடவே விடாதீங்க!

ParuthiMilk

இன்றைய தலைமுறைகளிடம் பருத்திப்பால் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று கூறலாம். மறைந்து வரும் நம் பாரம்பரிய உணவுகளில் இந்த பருத்தி பாலும் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதாரண டீக்கடையில் கூட கிடைத்தது.

இந்த பருத்திப்பால் ஒரு அமிர்தம் எனலாம் அந்த அளவுக்கு ருசி இருக்கும். தற்போது ஒரு சில இடங்களிலே பருத்தி பால் கிடைக்கிறது. ஆனால் நாம்  பருத்தி கொட்டைகளை வாங்கி வீட்டிலேயே எளிதாக தயார் செய்து பருகலாம். பருத்தி பால் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:
பருத்திக்கொட்டை=1கப்
பச்சரிசி= அரைக்கப்
வெள்ளம்= முக்கால் கப்
தேங்காய்= அரை மூடி
ஏலக்காய்= அரை ஸ்பூன்
சுக்கு= அரை ஸ்பூன்

செய்முறை:

பருத்திக்கொட்டை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருத்தி கொட்டையில் இருந்து பால் எடுப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பே பச்சரிசியை ஊறவைத்து கொள்ளவும். இப்போது பருத்திக்கொட்டை நன்கு அரைத்துக் பால் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு மூன்று முறை அழைத்து பால் எடுக்கலாம். அதை ஒரு பருத்திப்பால் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். பிறகு பச்சரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து வைத்துள்ள பருத்தி பாலுடன் நன்கு கலக்கவும்.

நன்கு கலந்த பின்னரே அடுப்பில் வைத்து கிளற வேண்டும். அடுப்பை ஆன் செய்துவிட்டு பச்சரிசியை கலக்கினால் பால் திரிந்து விடும். எனவே மாவையும் பருத்திபாலையும் நன்கு கலந்த பிறகு அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது கூட கை எடுக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் நிறம் மாரி கெட்டியாகும் வரை கிளறவும். பின்பு வெள்ளத்தையும் சேர்த்து கிளற வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஏலக்காய் மற்றும் சுக்குப்பொடி சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கவும். இப்போது மனம் மணக்கும் பருத்திப்பால் ரெடி.

பயன்கள்:

பெண்களின் 90% பிரச்சனைக்கு இந்த பருத்தி பால் ஒரு நல்ல தீர்வாகும். பெண்கள் பூப்பெய்த காலம் முதல் பிரசவ காலம் வரை ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது அருமருந்தாகும். பெண்களுக்கு உளுந்தங்களி எவ்வளவு நன்மையோ அதே அளவுக்கு இந்த பருத்தி பாலும்இணையானது  .

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பருத்தி காலை குடித்து வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இதை தொடர்ந்து நாம் எடுத்து வரும்போது கர்ப்பப்பை கட்டி, நீர் கட்டி, மார்பகப் கட்டி போன்றவை வராமல் தடுக்கலாம். குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் இதைத் தொடர்ந்து எடுத்து வந்தால் நெஞ்சு சளி குணமாகும். மேலும் இது அல்சரை குணப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

கர்ப்ப காலங்களில் இந்த பருத்தி பாலை எடுத்துக்கொள்ளக்கூடாது. கடைசி மாதங்களில் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடைசி மாதங்களில் எடுத்துக் கொண்டால் குழந்தை பிறப்பதற்கு எளிதாக இருக்கும். ஆகவே இந்த பருத்திப்பால் கிடைத்தால் வாரம் இரண்டு முறை ஏனும் பருகி வந்தால் உடலுக்கு நல்ல ஆற்றலைத் தரும். இந்த முறைகளை பயன்படுத்தி நாம் வீட்டிலேயே செய்து அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai