இரவு நேரத்திற்கு ஏற்ற சுவையான ஜவ்வரிசி சுண்டல்!

It is customary to want to eat light meals at night. Let's see now how to make jaggery tart in a deliciously different way.

இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி

பாசிப்பருப்பு

துருவிய தேங்காய்

உப்பு

எண்ணெய்

கடுகு

கருவேப்பிலை

பச்சை மிளகாய்

பெருங்காயத் தூள்

செய்முறை

ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் அந்த பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை நீரில் கழுவி வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து ஜவ்வரிசியையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு ஒரு முறை கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் தூவி கிளறி இறக்கினால் அட்டகாசமான ஜவ்வரிசி சுண்டல் தயார்.