அடடே.. மாங்காயை வைத்து சட்னி கூட செய்யலாமாம்.!

Mango recipe-மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவூரும்  என்று தான் சொல்லணும். அதனால்தான் முக்கனிகளில் முதல் கனி மாங்காயை வைத்துள்ளார்கள் . இந்த மாங்காயை  வைத்து

mango chutney

Mango recipe-மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவூரும்  என்று தான் சொல்லணும். அதனால்தான் முக்கனிகளில் முதல் கனி மாங்காயை வைத்துள்ளார்கள் . இந்த மாங்காயை  வைத்து நாம் பச்சடி, சாலட் ,குழம்பு போன்ற வகைகளில் செய்து  ருசித்திருப்போம், இன்று மாங்காயை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

பச்சை மாங்காய் =1 பெரியது

வெந்தயம் =1/2 ஸ்பூன்

கடலை பருப்பு =2  ஸ்பூன்

துவரம் பருப்பு =2 ஸ்பூன்

வரமிளகாய் =7-8

எண்ணெய் =4 ஸ்பூன்

சின்னவெங்காயம் =20

பூண்டு =10பள்ளு

துருவிய தேங்காய் =10 ஸ்பூன்

வெல்லம் =1 ஸ்பூன்

கருவேப்பிலை= கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் கடலைப்பருப்பு ,துவரம் பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதிலே பூண்டு மற்றும் சின்ன வெங்காயம், வர மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு தேங்காயையும் சேர்க்கவும் .

பிறகு அது நன்கு ஆறியவுடன் வெல்லம் , மாங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து தாளிப்பு சேர்த்தால் சட்டென மாங்காய் சட்னி தயாராகிவிடும். இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும் ,சுவையாகவும் இருக்கும்,செஞ்சு அசத்துங்க..

பச்சை மாங்காயில் உள்ள நன்மைகள்:

பச்சை மாங்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் மிக மிக அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் டயட்ரி ஃபைபர் நிறைந்துள்ளது.

அசிடிட்டி ,நெஞ்சு கரிப்பு உள்ளவர்கள் மாங்காயை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் .

மாங்காயை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் பெறும்  கண்களுக்கும்  நன்மை அளிக்கும்.

உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.

மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடும் போது பல்  ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும், பல் ஈறுகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.

சரும பொழிவை அதிகரிக்கும், முதுமையாவதை தள்ளி போடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

மாங்காய் உடல் சூடை அதிகரிக்கும் ,உடல் சூடு உள்ளவர்கள் தவிர்க்கவும் .2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும் .சிறுகுழந்தைகளுக்கு மாந்தத்தை  ஏற்படுத்தும் .

ஆகவே மாங்காய் கிடைக்கும் காலங்களில் தவறவிடாமல் சாப்பிட்டு அதன் மருத்துவ குணத்தை பெறுங்கள் .