அசத்தலான சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி?

வெண்டைக்காய் -வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம் .

ladies finger

வெண்டைக்காய்-வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம் .

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் =கால் கிலோ

வெங்காயம் =2

பச்சைமிளகாய் =3

தக்காளி =4

இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்

சீரகம் =1/2 ஸ்பூன்

சீரகத்தூள் =1/2 ஸ்பூன்

கரம் மசாலா =1 ஸ்பூன்

மல்லி தூள் =1 ஸ்பூன்

காஸ்மீர் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்

தயிர் =கால் கப்

எண்ணெய் =6

கொத்தமல்லி இலை  சிறிதளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு இன்ச் சைசுக்கு நறுக்கிக் கொள்ளவும், பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே வெண்டைக்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் அதன் நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே எண்ணெயில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும், அதிலே பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து கிளறி விடவும். தக்காளியை பேஸ்ட் ஆக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்,மல்லி தூள் ,சீரகத்தூள்  சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் தயிர் சேர்த்து கலந்து விடவும் .அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொண்டு தயிர் சேர்க்கவும் .

பிறகு அதிலே அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும், அதை ஐந்து நிமிடம் எண்ணெய்  பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்து மூடி போட்டு விடவும், பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை  சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கிளறிவிட்டு அதிலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் கிரேவி தயாராகிவிடும்.