மொறுமொறுவென சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Yam fry recipe-வித்தியாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

yam fry

Yam fry recipe-வித்தியாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு= 300 கிராம்

சோம்பு=2  ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட்  =ஒரு ஸ்பூன்

பட்டை =அரை இன்ச்

கிராம்பு=1

வெங்காயம் =இரண்டு

தக்காளி =ஒன்று

கசகசா= ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் =அரை ஸ்பூன்

எண்ணெய் =தேவைக்கேற்ப

unknown node

செய்முறை;

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .கை அரிக்காமல்  இருக்க கையில் சிறிதளவு எண்ணெய்  தடவிக் கொண்டு பிறகு சுத்தம் செய்யவும். இப்போது கிழங்கை  நறுக்கி நன்றாக கழுவி விட்டு மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 50 சதவீதம் வேக வைத்துக் கொள்ளவும்.

unknown node

இப்போது பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வேகவைத்த கிழங்கை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில்  நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு ஒரு ஸ்பூன், சிறிதளவு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூளை சேர்த்து கலந்து விடவும்.

unknown node

இப்போது வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு  மிக்ஸியில் தேங்காய் ,ஒரு ஸ்பூன் சோம்பு பட்டை, கிராம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து  அரைத்துக் சேனைக்கிழங்குடன்  சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் மொறு மொறுவென சேனைக்கிழங்கு வறுவல் தயார்.