சுவையான ரவை போண்டா செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலையில் தேநீருடன் ஏதாவது ஒரு உணவினை சாப்பிடுவதை விரும்புவர். அந்த வகையில், தற்போது இந்த பதிவில்

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலையில் தேநீருடன் ஏதாவது ஒரு உணவினை சாப்பிடுவதை விரும்புவர். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான ரவை போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

ரவை -2 கப்

தயிர் -ஒரு கப்

வெங்காயம் -2

பச்சை மிளகாய் -3

கொத்தமல்லி -சிறிது

கருவேப்பிலை -சிறிது

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் -தேவைகேற்ப

செய்முறை

முதலில் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு பின் இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை போட வேண்டும்.

பின் வெங்காயம் போன்றவை மாவு சேருமாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான ரவை போண்டா ரெடி.