சென்னா மசாலா செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Channa masala-  சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .

channa masala

Channa masala–  சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .

தேவையான பொருட்கள் :

சுண்டல் =அரை கிலோ

தேங்காய் =அரை கப்

பச்சை மிளகாய்= இரண்டு

முந்திரி =5

தக்காளி =2

வெங்காயம் =3

பூண்டு=5  பள்ளு

எண்ணெய் =4 ஸ்பூன்

கடுகு =1 ஸ்பூன்

சோம்பு =1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்

கரம் மசாலா= ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் =ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் =இரண்டு ஸ்பூன்

unknown node

செய்முறை:

சுண்டலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .அரை கப் சுண்டலை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

unknown node

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது பூண்டு மற்றும் , பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.

unknown node

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். இப்போது இதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும்  சுண்டலையும் சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.