அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மாங்காய் தக்காளி சாதம்

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

புழுங்கலரிசி – 2 கப்

சிறிய மாங்காய் – 1

பெரிய வெங்காயம் – 4

காய்ந்த மிளகாய் – 4

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

தக்காளி – 2

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

கடுகு – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசியை கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

இதனை பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாற்ற வேண்டும். இப்பொது சுவையான மாங்காய் தக்காளி சாதம் தயார்.