நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – தேவையான அளவு
வேக வைத்த மக்காச்சோளம் – அரை கப்
வெங்காயம் – 2
துருவிய சீஸ் – ருசிக்கு
உருளைக்கிழங்கு – 2
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி – சிறிது
முந்திரி – 5
மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி நறுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவேண்டும். கடைசியாக வேகவைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். வழக்கம்போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடிவிடவேண்டும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன்கலவையை சிறிது துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாற வேண்டும்.