அசத்தலான அரைக்கீரை வடை செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களை தேநீருடன், கடையில் ஏதாவது சிற்றுண்டி வாங்கி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிட பழக்க வேண்டும். தற்போது

நாம் மாலை நேரங்களை தேநீருடன், கடையில் ஏதாவது சிற்றுண்டி வாங்கி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிட பழக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான அரைக்கீரை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

அரைக்கீரை – ஒரு கப்

உளுந்து, கடலைப்பருப்பு – அரை கப்

வெங்காயம் – 1

பச்சைமிளகாய் – 2

எண்ணெய் – பொறிக்க

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு,  நறுக்கிய   மிளகாய், கீரையை சேர்க்க வேண்டும்.

பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, வடைகளாக தட்டி வைத்து,  சூடாக்கி தட்டிய வடையை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான அரைக்கீரை வடை தயார்.