சப்பாத்தியில் உப்புமாவா...? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்...!

Come find out how to salt the rest of the chapati

காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

சப்பாத்தி

தக்காளி

வெங்காயம்

பச்சை மிளகாய்

மிளகாய்த்தூள்

தேங்காய் துருவல்

பெருங்காயத்தூள்

கொத்தமல்லி

உப்பு

மஞ்சள்தூள்

எண்ணெய்

செய்முறை

தாளிக்க :முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பில்லை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். அதன் பின்பு இவற்றுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

கலவை :வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

உப்புமா :இறுதியாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சப்பாத்திகளை இந்த கலவையுடன் சேர்த்து 5 நிமிடம் நன்றாகக் கிளறவும். அதன் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சப்பாத்தி உப்புமா தயார்.