உருளைக்கிழங்கில் உருண்டை வடை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள் ...!

Come learn how to make potato dumplings

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது அதனுடன் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று வடை அல்லது முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு

கடலை மாவு

மிளகாய் தூள்

கொத்த மல்லி

எண்ணெய்

உப்பு

சீரகம்

செய்முறை

அரைக்க :முதலில் மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

கலவை :அதன் பின்பு அவித்த உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். அதன் பின் அரைத்த இஞ்சி, கடலை மாவு, கொத்த மல்லி, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.

பொரிக்க :ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருளைக்கிழங்கு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான உருளைக்கிழங்கு வடை தயார்.