வெண்டைக்காயில் பக்கோடாவா, எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

Come learn how to make a spicy artichoke baguette baguette for coffee and tea in the evening.

மாலை வேளையில் காபி, டீ குடிப்பதற்கு காரசாரமாக அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பொதுவாக பக்கோடா என்றால் நாம் வெங்காயம், பாகற்காய், இறைச்சி ஆகியவற்றில் தான் செய்து .சாப்பிட்டிருப்போம். வெண்டைக்காயில் பக்கோடா அதிகம் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இன்று வெண்டைக்காய் பக்கோடா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்

கடலை மாவு

அரிசி மாவு

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

கறிவேப்பிலை

உப்பு

எண்ணெய்

செய்முறை

முதலில் வெண்டைக்காயின் காம்பு மற்றும் தலை பகுதிகளை நீக்கிவிட்டு நீளமான துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடலை மாவு, அரிசி மாவு சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் நாம் ஏற்கனவே பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காயை கலவையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான, அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா தயார்.