வீட்டிலேயே மிக சுலபமாக முக்கியமான மூன்று பொருட்கள் வைத்து எப்படி வெண்பொங்கல் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
பாசி பருப்பு
முந்திரி
நெய்
மிளகு
சீரகம்
மிளகாய்
கருவேப்பில்லை
செய்முறை
முதலில் குக்கரில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும். உறைப்புக்காக முதலிலேயே அரிசியுடன் ஒரே ஒரு பச்சை மிளகாயை சேர்த்து ஆவியாவிட்டால் நன்றாக இருக்கும். பின் லேசாக நெய் ஊற்றி கிளறி வைத்துவிட்டு மூடி விடவும்.
மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கருவேப்பில்லை, முந்திரி சேர்த்து லேசாக பொரிந்து வரவும் அப்படியே குக்கருக்குள் கொட்டி மூடி வைத்துவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தல் அட்டகாசமான வெண் பொங்கல் வீட்டிலேயே தயார்.