Green Chilli Pickle : பச்சை மிளகாயில் இவ்வளவு சுவையான ரெசிபி செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

Green Chilly

பச்சை மிளகாய் என்பது அனைவரது சமையலறையில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. ஏனென்றால், பச்சை மிளகாய் அனைத்து வகையான சமையல்களிலும் பயன்படுத்த்ப்படுகிறது. பசசை மிளகாயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல ஊட்ட சத்துக்கள் உள்ளது.

குறிப்பாக பச்சை மிளகாய் கலோரிகள் குறைவாக உள்ளது, எனவே இது உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் கேப்சைசின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில் பச்சை மிளகாயை வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பச்சை மிளகாய்  – 10
  • புளி – லெமன் சைஸ்
  • வெல்லம் – 1 கப்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • கடுகு – கால் தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு

Green Chilli Pickle செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராகி வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் வதக்கிய பச்சைமிளகாய், புளி, வெல்லம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பெருங்காயத்தூள் இரண்டையும் சேர்த்து வதக்கிவிட்டு அரைத்து வைத்துள்ள கலவை அதனுள் ஊற்றி நன்கு வதக்க வேண்டும். பச்சை மிளகாய் இளம் பச்சை நிறத்திலிருந்து கடுமையான பச்சை நிறத்துக்கு மாறும் வரை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை தயிர்சாதம் சாம்பார் சாதம் என நமக்கு பிடித்த உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று மாதங்கள் வரை சாப்பிடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts