தினமும் ஆளி விதையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

Knowing what are the benefits of taking flax seed daily

ஆளி விதை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது நமக்கு தெரிந்தாலும், தற்போதைய நவீன காலகட்டத்தில் இந்த ஆளி விதைகளை பயன்படுத்துவதை நாம் மறந்துவிட்டோம். இந்த ஆளி விதையில் ஒமேகா-3, பைபர் போன்ற பல கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நமது உடலுக்கு மட்டும் அல்லாமல், நமது சருமம் மற்றும் முடியை வளர செய்யவும் பளபளப்பாக்க மாற்றவும் உதவுகிறது. இதன் நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

முடி வளர்ச்சி

unknown node

இந்த ஆளி விதைகளை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது, இவை நமது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இவற்றில் வைட்டமின் பி அதிக அளவில் காணப்படுவதால், இது முடியை கருமையாக மாற்றவும், உடைந்த முடியை வளர்ச்சி அடைய செய்யவும் உதவுகிறது.

சரும பொலிவு

unknown node

இந்த ஆளி விதை நமது சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இந்த ஆளி விதைகளை நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது முகத்தில் இழந்த பொலிவை பெற உதவுகிறது.

அலர்ஜிகள்

unknown node

இந்த ஆளி விதையில் ஒமேகா 3 காணப்படுவதால் இது நமது உடலில் ஏற்படக்கூடிய தடிப்புகள், சொறி சிரங்கு போன்றவற்றை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. இது நமது சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தேவையற்ற கருமை நிறங்களை மறைப்பதற்கும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

unknown node

இந்த ஆளி விதையை வறுத்து பொடியாக்கி சாப்பிடலாம். இந்த பொடியை காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கலந்தும் குடிக்கலாம். இது நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவற்றை நமது அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கலாம். பெரும்பாலும் இது இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.