தினமும் இந்த ஒரு லட்டு சாப்பிட்டால் போதும்...! விரும்பிய உடல் அழகு பெறலாம்!

Come learn how to make Laddu lose weight.

உங்களது உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், முடி உதிர்வை நிறுத்தி முடியை அடர்த்தியாக மாற்றவும், முக அழகை பேணிக்காக்கவும் தினமும் ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டாலே போதும். அது என்ன லட்டு என்று கேட்கிறீர்களா? அந்த லட்டு எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

கொள்ளு

கருப்பு உளுந்து

வேர்க்கடலை

எள்ளு

வெல்லம்

ஏலக்காய்

நெய் அல்லது நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் அளவுக்கு கொள்ளை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு எடுத்து வைத்துள்ள கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேர்க்கடலை, எள், ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு  கொள்ளு, கறுப்பு உளுந்து, வேர்க்கடலை, ஏலக்காய், எள் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொண்டு, வெல்லத்தை பொடி செய்து இதனுடன் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கையில் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஈரமில்லாமல் உள்ள ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனை 10 நாட்கள் வரை . அதன்பின்பு கெட்டு விடும். எனவே 10 நாட்களுக்கு தேவையான அளவு லட்டு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த லட்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நிச்சயம் உங்களது உடலிலும் முடியிலும் நல்ல மாற்றத்தை உணர முடியும் ஒரு முறை செய்து பாருங்கள்.

தினமும் இந்த ஒரு லட்டு சாப்பிட்டால் போதும்...! விரும்பிய உடல் அழகு பெறலாம்!