தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை […]
மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் […]
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய […]
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை […]
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில்,தாமதமானது.மேலும்,ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ள நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்,முழக்கங்கள் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே,தாமதமாக வந்த இபிஎஸ் முதலாவதாக பொதுக்குழு மேடையில் ஏறிய நிலையில்,முதலாவதாக வருகை புரிந்த ஓபிஎஸ் இரண்டாவதாக மேடை ஏறினார். இந்நிலையில்,பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.தற்காலிக […]
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில்பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும்,மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். இந்த நிலையில்,வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.அப்போது, […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது.ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை மற்றும் கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு,இதனால் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.பொதுக்குழுவில் எது நடக்கும்,எது நடக்காது என உத்தரவாதம் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,32-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.27 மற்றும் டீசல் […]
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,எம்ஜிஆர்,ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் […]
சென்னையில் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவு. ராணுவத்தில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்றும்,நாளையும் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,ஜூன் 22,23 ஆகிய தேதிகளில் வடதமிழகம்,கன்னியாகுமரி. திருநெல்வேலி,தென்காசி,தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று 596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,கொரோனா தொற்று அதிகரித்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில்,சென்னை தனியார் மருத்துவமனைகள்,சிகிச்சை மையங்கள் & […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழு ஒருபுறமும்,ஓபிஎஸ் மற்றொரு புறமும் ஆலோசனை நடத்தி வந்த நிலையில்,தீர்மானக்குழுவுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.இதனையடுத்து,கூட்டம் முடிவுற்றதையடுத்து,அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தனது இல்லத்திற்கு […]
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,சென்னை,அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதன்படி,பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்தா பரபரப்பான நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.தனது இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில்,தற்போது ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.மேலும்,தனது ஆதரவு […]
சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கபடுகிறது என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 40 பணிமனை – பேருந்து நிலையங்களில் ஜூலை 31 வரை இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,28-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.27 மற்றும் டீசல் […]
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதன்காரணமாக,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின்னர்,ஓபிஎஸ்-வுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்:”அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது” […]
சென்னை:22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த நிலையில்,தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில்,தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,சவரனுக்கு ரூ.160 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 […]
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர்.மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும்,இளமாறன் அவர்களின் மறைவு காரணமாக அவரது குடும்பத்தினருக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவரும், ஆசிரியர் சமுதாயத்தின் நலனிற்காக தொடர்ந்து போராடி வந்த களப்போராளியுமான திரு. பி.கே.இளமாறன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். […]