சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.அதாவது,கடந்த ஜூலை 6 முதல் ‘அல்பெலியன் நிகழ்வு’ எனப்படும் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்,குறிப்பாக, சூரியனுக்கும்,பூமிக்கும் இடையே உள்ள 9 கோடி கிமீ அளவிலான வழக்கமான தூரம்,அல்பெலியன் நிகழ்வினால் 15 கோடியே 20 லட்சம் கிமீ ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்,கடந்த ஆண்டை விட தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும்,இதன்காரணமாக,உடல்வலி,காய்ச்சல்,இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் […]
அதிமுக பொதுக்குழு வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பணிகளில் ஈபிஎஸ் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே,பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்தார்.அப்போது, பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்று மட்டும் 2662 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது . கொரோனாவால் தமிழகத்தில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் 17,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1791 பேர் குணமடைந்துள்ளனர்,உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி […]
மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 20, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் […]
சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக […]
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா […]
பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. […]
சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டு சென்ற பெண். சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டுசென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மன அழுத்தத்தில் இருந்த பெண் நகைகளை எடுத்துவந்து குப்பை தொட்டியில் போட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. .
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.அந்த வகையில்,அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை,”புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு.அதைப் போல பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]
சென்னை,நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.ரூ.22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில்,தொழில்துறையை தங்கமாக மாற்றிய அமைச்சர் ‘தங்கம் தென்னரசு’ என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.இது […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற பெயரில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.அப்போது,முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த மாநாடு மூலமாக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடுகளை […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்துள்ளதாகவும்,இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,43-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை. சென்னையில் சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான ரூ.ரூ.234.75 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. பண மோசடி திட்டத்தின் கீழ் சரவணா கோல்டு பேலஸ் கடையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,39-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் […]