திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைத்தனர். இதற்கு தற்போது தமிழக முதல்வர் நிதியுதவியிலிருந்து, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் , படு காயம் அடைந்த 12 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி அளிப்பதாக தமிழக […]
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், மச்சுவாடியில் உள்ள 61-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததாக கூறி அமமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டமான் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே அது வெற்றிக்கு நாள் குறித்து போலத்தான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாப்களின் அவர்கள் திருச்சியில், திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவர்கள் என்றும், அதிமுக, பாஜக, பாமகவின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், திருச்சி திமுகவின் எஃ கு […]
திருச்சி விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ 203 கிராம் தங்கத்தை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த சசிகலா, தனலட்சுமி ஆகியோரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில், அனாதையாக ரூ.9,600 கிடந்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்த பல விதிமுறைகளை விதித்துள்ளார். இந்நிலையில், திருச்சி, துறையில் முதல்வர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதிக்கு தேர்தல் பறக்கும் படையினர் […]
திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.வழக்கம்போல இன்று காலை வங்கியை திறக்க சென்றபோது வங்கி சுவரில் துளையிட்டு 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும் ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சி சமயபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.கேஸ் வெல்டிங் […]
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, பல இடங்களின் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், இப்போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 காளையர்கள் களமிறங்கவுள்ளனர். காளையர்கள் மிக உற்சாகமாக காளைகளை அடக்குவதில் கவனம் செலுத்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, ஐதராபாத்தைச் சேர்ந்த கெருன்னிசா குல்முகமது என்ற பெண்ணின் உடைமைகளில் இருந்து 19 லட்சத்து 30 ஆயிரத்து 577 ரூபாய் மதிப்புள்ள 599 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த […]
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆட்சியில் இருக்கும்போதே கொள்ளையடிக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தினால் தான், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் கூட அதிமுகா உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது போன்ற கமிஷன், கரப்ஷன் ஆட்சியை கண்டதில்லை என விமர்சித்த ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு […]
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் அவர்கள் ஆய்வு செய்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழுவினர் 2-ம் தேதி துவங்கியுள்ளனர். இதனையடுத்து, கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் இதனை பார்வையிட்டு, மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில், ஒரு பயணியிடம் இருந்து 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் வந்த மணி கலியபெருமாள் என்ற பயணியிடம் இருந்து 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 3.52 லட்சம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மணி கலியபெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இணையதளத்தில் புகார் செய்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதிய இணையதள முகவரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. [email protected] என புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி உள்ளது. இந்த முகவரியில் கடந்த 1 மாத்தில் மட்டும் அளிக்கப்பட்ட 110 புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த […]
பள்ளத்தில் விழுந்து தவித்து கிடந்த நாயை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. உயிருக்கு போராடும் எத்தனையோ மனிதர்களை தினசரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காப்பாற்றி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒரு படி மேலே போய் உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றி உள்ளனர். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில், சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருந்து யாரோ ஒருவர் அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதை அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பையொட்டி, இன்று அதிகாலை 4.15 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து […]
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழ்நாடு இளம்பிள்ளை சாதனையாளர்களின் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவன் ஜீவன் சிவா கூறியுள்ளார். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜீவன் சிவா 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவனின் சாதனை குறித்து அவரது தந்தை முத்துக்குமார், ஜீவன் சிவாவுக்கு வில்-அம்பு எய்துவதில் உள்ள ஆர்வத்தை அறிந்து […]
திருச்சி மாவட்டம்,முசிறி அருகே மதுரகாளியம்மன் கோவிலில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. முசிறி அருகே உள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மதுர காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் சார்பில் நாத சங்கமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருச்சி,கும்பகோணம், நாமக்கல்,முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து […]
திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவனது டிச.18 தேதி நடைபெறுகிறது.இதனால் அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் அன்றைய நாளில் அம்மாவட்டமே விழா கோலம் பூண்டு கொண்டாடுவது வழக்கம் இந்நிகழ்வை ஒட்டிய டிசம்பர் 18 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. திருச்சி தென்னூர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில், பொதுமக்களை கவரும் வகையில் பல விற்பனைக்கு உள்ளன. இந்த விழா தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தால் கொத்தனார் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ சேகர் (37). இவரது மனைவி பெயர் வனரோஜா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராஜசேகர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மனைவி மேனகாவுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். இதனை அறிந்த வனரோஜா 5 ஆண்டுகளுக்கு முன்பதாகவே ராஜசேகரை பிரிந்து குழந்தைகளையும் அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, […]