சீனாவில் நடந்த அழகி போட்டியில், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். திருச்சி, முன்னாள் கவுன்சிலர் நெப்போலியன் மகள், ஸ்டெபி அமல்யா. இவர் திருச்சி இந்திராகாந்தி, சாரநாதன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவர் சென்னை மாடல் பாய்ண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். அவர் அங்கு நடைபெற்ற போட்டியில் நான்காவது இடம் பிடித்தார். இதனையடுத்து, ஸ்டெபி அமல்யா சீனாவில் நடைபெற்ற அழகிகள் போட்டியில் கலந்துகொண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
திருச்சியால் கடன் சுமையால் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்துகொண்டார். திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் முருகானந்தம் – வெள்ளையம்மாள். முருகானந்தம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் மித்ரா என்ற குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுக்கு கடன் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முருகானந்தம் கோவைக்கு சென்றுள்ளார். பணம் கொடுத்தவர்கள் வந்து கடன் கேட்டுள்ளனர். இதனையடுத்து […]
திருச்சியில் ஆசிரியரிடம் இருந்து மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். திருச்சி ஜான்தோப்பு கார்கில் நகரை சேர்ந்தவர் கற்பகம். இவர் அப்பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது பைக்கில் வந்த மர்மநபர்கள் அவரது கழுத்தில் உள்ள 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. மேகதாதுவில் மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அணை கட்ட ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து , மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டமானது இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் மதிமுக , விசிக , சிபிஐ , சிபிஐஎம் , காங்கிரஸ் , மமக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் பங்கேற்றன. அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையை பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருச்சி துறையூர் நீதிமன்றத்தில் ஆய்வு நடைபெற்றது. திருச்சி துறையூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை மாற்று அமர்வு நீதிபதியான குமரகுரு ஆய்வு நடத்தினார் முதன்மை நீதிபதியை துறையூர் வழக்குரைஞர் சங்க தலைவர் டி.ராமசாமி வரவேற்றார். மேலும் 50 வருடம் நிறைவு செய்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
2.0 திரைப்படம் திருச்சி மணப்பாறையில், மனப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள டி.டீ.எஸ் என்ற திரையரங்கில் வெளியிடப்படயிருந்தது. 396 இருக்கைகள் ரசிகர்களுக்குங்க ஒதுக்கப்பட்டு காலை 8 மணிக்கு ரசிகர்கள் காட்சியாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தது. இந்நிலையில், திரையரங்க நிர்வாகம் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகளை பொதுமக்களுக்கு சிறப்பு காட்சி என விற்பனை செய்துள்ளதாம். இதனையடுத்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகிகள் பாஸ்கர் மற்றும் கணேஷ் தலைமையில் புதன்கிழமை திரையரங்கை முற்றுகையிட்டனர். இதனையடுத்து நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ரசிகர்கள் காட்சி […]
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த 5 பயணிகளிடம் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியாவிலிருந்து, ஏர் ஏசியா விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த ஜி.யு மாக்கான், இளையான் குடியை சேர்ந்த சம்சூதீன் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, டார் லைட் மற்றும் எலக்ரிக் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 6 கிலோ […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறி சட்டமன்ற தொகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுரைபடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முசிறி எம்.எல்.ஏ செல்வராசு தலைமையில், நிவாரண பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேம்டும் எனவும், அந்த பகுதிகளுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நேரில் சந்தித்து நிதி வழங்கினார். தமிழகத்தை மட்டும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி, மணப்பாறை கோவில்பட்டி சாலையை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருக்கு வயது 22. இவர் தண்ணீர் விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தண்ணீர் இறக்குவதற்காக ஒரு வீட்டுக்கு டாடா ஏஸ் டேங்கரில் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். தண்ணீர் ஏற்றுவதற்காக வாகனத்தில் இருந்த மோட்டாரை இயக்கியுள்ளார். அந்த நேரம் எதிர்பாராத விதமாக மிசாரம் தாக்கி உயிரிழந்த்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.தொடர்மழை காரணமாக ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். கமலஹாசன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசை […]
திருச்சி மாநகராட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த பொருட்களை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் லாரி மூலம் அனுப்பி
திருச்சி மாவட்ட சிறை கைதிகளுக்கு தேசிய காச நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இணைந்து காச நோய் மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை முகாமை நடத்துகிறது. திருச்சியில் சிறை கைதிகளுக்கு நோய் கதறியும் முகாம் நடத்தப்படுகிறது. நவ.27 திருச்சி மத்திய சிறையிலும், 28,29 தேசிய மகளீர் சிறையிலும், 30ம் தேதி காப்பகங்களிலும் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறியுள்ளார்.
திருவாரூர், நாகையில் வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது […]
திருச்சி மற்றும் அதன் உள்வட்டாரங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையும், மாலையும் மழை பெய்து வந்தது, இரவிலும் விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. திருச்சியில் 60.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
முதலமைச்சர் பழனிச்சாமி நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார் . கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி […]
கஜா புயல் சேதங்களை பார்வையிட திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட உள்ளார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட […]
திருச்சி துறையூர் ஒன்றிய அதிமுகா சார்பில் நடைபெற்ற 47ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி ரத்தினவேல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்சியை பலரும் பல சூழ்ச்சிகளால் கவிழ்க்கா நினைக்கிறார்கள். ரஜினி, விஜய், கமல் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதல்வராகும் கனவில் பல சூழ்ச்சிகளை செய்வதாக கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும், தினகரனும் இணைந்து இந்த ஆட்சியை பிடித்து விடலாம் என்று […]