கொங்கு குளோபல் போரம் அமை[பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து அறிக்கை வழங்கினார். ‘ கொங்கு குளோபல் போரம் ‘ அமைப்பினர், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் சில அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அலுவலகத்தில் சந்தித்தனர். இவர்கள் கொங்கு மண்டல பகுதிக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என பட்டியலிட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உதவுவதாக உறுதியளித்துள்ளார்.
கஜா புயலால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் சென்றுள்ளனர். காஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் இருந்து ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 200 ஊழியர்கள் அரசு பேருந்தில், அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள்,மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. DINASUVADU
கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை […]
திருச்சியில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்த இருவர் நகையை பறித்து சென்றுள்ளனர். திருச்சி கே.கே.நகர், ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனந்தி (65). இவர் திருவள்ளுவர் நகரில், தனியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட அனைத்து அரசு துறை ஓய்வொஓதியசங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் முறையை அமல்படுத்துமாறும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கொம்பு மேலணை பகுதியில் தாழில்க தரைப்பாலம் அமைத்தல், புதிய அணை காட்டும் பணிகளை விரைவாக தொடங்குதல், பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில், புதிய பாலம் அமைத்தல் மற்றும் காவிரி, கொள்ளிடம், அய்யன் வாய்க்கால் மீது பாலம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட குழு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சுந்தரவேல் மற்றும் பாலக்கரையை சேர்ந்த ராணி ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகிற நிலையில், திருச்சியில் முசிறி அருகே தமிழழகன் என்பவரது 2 வயது குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். குழந்தை சிவானியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருச்சியில் அரசு மருத்துவமனையின் அருகில் பழைய பொருட்களின் குடோன் உள்ளது. இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன அலமாரிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள், மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் புத்தகத்தை எடுத்து சென்று படித்துவிட்டு கொண்டு வந்து வைக்கலாம். இந்த நூலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் மட்டும் இதில் பணியில் இருப்பாரகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்த 5 பேரிடமும் ரூ.4.72 லட்சம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.
கோவை- திருச்சி ஜனசதாப்தி ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. ரயில் சென்றுகொண்டிருந்த போது, ரயில் எஞ்சினில் பறவை மோதியதால் பழுது ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், திருச்சி புறநகரான முத்தரநல்லூரில் ஜனசதாப்தி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பிரசித்தி பெற்றதும் சிறப்பு பெற்றதுமான முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் முருகன் காட்சி தருகிறார் அய்யன் முருகன் முருகன் என்றாலே தமிழ்கடவுள் என்றும் சம்ஷாரத்திற்கு பேர் போனவர் அய்யன் முருகன் தன்னை போர் புரிய வந்த சூரனையும் தன் அன்பால் மாற்றி மயிலாக மாற்றிவர் முருகன் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தாக நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு மசினி என்ற யானை தனது பாகனை கொன்றுள்ளது. இந்நிலையில் பாகனை கொன்ற யானையை முதுமலை அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மசினி யானையை அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து 4பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் பின் தொடர்ந்த நிலையில், பேருந்துக்காக நின்றுகொண்டு இருந்த போது தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி ரூபாயை பறித்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறு காரணமாக விமானம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தொழிநுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ஏர் இந்தியா விமானம் மாலை 5 மணிக்கு ஷார்ஜா செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உய்ரநீதிமன்றம், 18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து, திருச்சி மணியங்குறிச்சியில் பேட்டியளித்த துணை சபாநாயகர் தம்பிதுரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 பெரும் மன்னிப்பு கேட்டால், மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி, முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும், இது தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.