திருச்சியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருச்சி, மணப்பாறை கோவில்பட்டி சாலையை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருக்கு வயது 22. இவர் தண்ணீர் விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தண்ணீர் இறக்குவதற்காக ஒரு வீட்டுக்கு டாடா ஏஸ் டேங்கரில் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார்.
தண்ணீர் ஏற்றுவதற்காக வாகனத்தில் இருந்த மோட்டாரை இயக்கியுள்ளார். அந்த நேரம் எதிர்பாராத விதமாக மிசாரம் தாக்கி உயிரிழந்த்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.