அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.! தற்போதைய நிலை என்ன.?

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய புகாரில் இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர். ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.

Arupukottai DSP Gayathri attacked

விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 28) எனும் சரக்கு வாகன ஓட்டுநர், கடந்த திங்களன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ,  காளிகுமார் வாகனத்தை வழிமறிந்து அவரை அரிவாள் போன்ற கூறிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமுற்றதால் சிகிச்சை பலனின்றி காளிகுமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவலறிந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காளிகுமார் உறவினர்கள் குவிந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, அருப்புகோட்டை – திருச்சுழி சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சம்பவம் குறித்த அறிந்த உடன் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி மற்றும் காவல் உயர் அதிகாரிகள் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களுடன் சமாதானம் பேச முயற்சித்தனர்.

அந்த சமயம் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை யாரோ ஒருவர் இழுத்தனர். அங்கு நடைபெற்ற களோபரம் முழுவதும் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலானது.

பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து அருப்புக்கோட்டை எஸ்பி கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். வீடியோவை ஆதாரமாக கொண்டு இதுவரை 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்ததாக திருச்சுழி நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பாலமுருகன் உட்பட வழக்குப்பதிவு செய்த 8 பேரில் 7 பேர் கைதாகியுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவல்துறை தரப்பில் கூறுகையில், காளிகுமார் கொலை வழக்கில் இதுவரை, திருச்சுழியைச் சோ்ந்த லட்சுமணன் (வயது 24) மற்றும் அருண்குமாா் ( வயது 22), மதுரையைச் சோ்ந்த காளீஸ்வரன் (வயது 22), பாலமுருகன் (வயது 25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters
Donald Trump and cars