குஜராத் மாநிலத்தில் உள்ள மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் இவருக்கு வயது 17 ஆகிறது. தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.இது அவருக்கு இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். ஆம் சரியாக 2 வருடத்திற்கு முன் அதாவது 2018 இவருடைய முடி 170 செ.மீட்டர் வளர்ந்திருந்தது இதுவே அவருடைய முதல் கின்னஸ் சாதனையாக கருதப்பட்ட நிலையில் தான் தற்போது 190 சென்டி மீட்டர்க்கு தன் முடிவை வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவரிடன் கேட்டப்பொழுது முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு 6 -ஆக இருக்கும் போது ஏற்பட்டது என்றும் அதில் இருந்து முறையாக வயதில் நிலன்ஷி தனது தலைமுடியை வளர்க்க ஆரம்பித்தேன் என்று தெரிவித்தார்,மேலும் அவர் கூறுகையில் நான் எங்கு சென்றாலும் அங்கே என்னுடன் மக்கள் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர்.
அப்போது நான் ஒரு செலிப்ரட்டி போல உணர்கிறேன் என்று தெரிவித்தார்.இந்த சாதனையை நிலன்ஷி டீன் ஏஜர் பிரிவில் நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இதற்கு முன் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்பவர் 152.5 சென்டி மீட்டர் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார் அதன் பிறகு இந்த சாதனைகளை எல்லாம் கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீளமாக தலைமுடி வளர்த்து முறியடித்தார்.இவர்களின் இந்த 2 சசாதனைகளையும் 2018 ஆம் ஆண்டு நிலன்ஷி முறியடித்து சாதனை படைத்தார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…