உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

உயிரிழந்த 21 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் தங்கி வேலைபார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபயணமாகவோ அல்லது லாரிகளிலோ தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது இவர்கள்  சென்ற லாரி மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 21 பேர் உயிரிழந்தனர்.  22 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில், உயிரிழந்த 24 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும்,   விபத்தில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம்  வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, உத்தரப்பிரதேசம் அவ்ரயாவில் நடைபெற்ற சாலை விபத்து மிகவும் துயரமானது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மஹாராஷ்டிராவில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

10 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago