கொரோனாவிலிருந்து குணமடைந்த 104 வயது மூதாட்டி..! நம்பிக்கையின் உச்சக்கட்டம்..!

கேரளாவில் 104 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து குணமடைந்து வந்திருப்பது அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.
கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாள். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மே 31 ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். உடனே, அருகில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பயனாக மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களுக்கும் நம்பியூட்டும் விதமாக 11 நாட்களில் கொரோனாவை வென்றுள்ளார். 104 வயது மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், அவரது மருமகளுக்கும், மருமகளின் தாயாருக்கும் கொரோனா ஏற்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025