ராஞ்சியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நான்கு சிறுவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று ராஞ்சியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறுவர்கள் என்று மண்டார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது தலைமறைவாக உள்ள மற்ற மூன்று குற்றவாளிகளின் சரியான வயது அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு தெரியவரும் என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டசிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் மாந்தர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஞ்சி காவல் கண்காணிப்பாளர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மற்ற குற்றவாளிகளின் பெயர்களை தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிறுமியுடன் நண்பராக இருந்த சிறுவன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவளை அழைத்து சென்றதாகவும், அங்கு சென்றதும், அந்த சிறுவன் தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து, அவளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…