இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்.. நாளை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாளை மற்றும் நாளை மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, நாளை மாலை 6.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இதுபோன்று செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நாளை மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே உள்பட கூட்டாக கூறுகையில், மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா கூட்டணி கூட்டம் மகாராஷ்டிராவில் நடக்கப் போவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. இந்தியா கூட்டணியில் ஏற்கனவே பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் இருந்த நிலையில், தற்போது மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியா கூட்டணிக்கான இலச்சினை ஆலோசனை கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். INDIA கூட்டணியின் வளர்ச்சியை பார்த்து பயத்தில் பாஜக இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும்.

இந்தியா கூட்டணி ஆலோசனையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வரும் தலைவர்களுக்கு நாளை விருந்தளிக்கிறார் உத்தவ் தாக்கரே. மேலும், நாளை முதல் இரண்டு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

5 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago