பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  2 போலீசார் உயிரிழப்பு..!

நாளை நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம்  கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம்  கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயங்கரவாதிகள் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில்  உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.