இந்தியாவில் 2 வது நாளாக 3 லட்சத்தை கடந்த கொரோனா 2,263 உயிரிழப்பு;3,32,730 பாதிப்பு...!

2,263 deaths, 3,32,730 affected by corona past 3 lakh in India on the 2nd day ...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 332,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,263,695, உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24,28,778 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,648,159 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,86,928 ஆக உயர்ந்துள்ளது

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பத்து மாநிலங்கள் ஒரு நாளில் பதிவுசெய்யப்பட்ட புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 75% ஆகும் என்று சுகாதார அமைச்சகம் ஒரு நாள் முன்பு தெரிவித்திருந்தது .

தடுப்பூசி போடப்பட்டவர்களின்  எண்ணிக்கை 13.53 கோடியைத் தாண்டியுள்ளது, இதில் கடந்த 24 மணி நேரத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 வரை கொரோனாவுக்கு  க்கு 274,445,653 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, வியாழக்கிழமை மட்டும்  1,740,550 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு  26,000 க்கும் மேற்பட்டவர்கள் புதியதாக  பாதிக்கப்பட்டுள்ளனர் 306 பேர் உயிரிழந்துள்ளனர். . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 67,013 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 568 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா (4,094,840), கேரளா (1,322,054), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), ஆந்திரா (942,135), உத்தரப்பிரதேசம் (976,765) மற்றும் டெல்லி (956,765) ஆகியவையாகும்.