டெல்லி அரசுப் பள்ளியில் எரிவாயு கசிவால் 28 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

delhi government school

டெல்லியின் நரைனா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறல் காரணமாக 28 மாணவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவருக்கு ஆக்ஸிஜன் ஆதரவு அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 19 பேர் ஆர்எம்எல் மருத்துவமனையிலும், 9 பேர் ஆச்சார்யா பிக்ஷுக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். டெல்லி மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிக்கையில், அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மேயர் ஷெல்லி ஓபராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மாணவர்களை சந்தித்து அவர்கள் நலமாக இருப்பதாக கூறினார். இரண்டு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கு திரும்ப நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்