சென்னை , ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று கடந்த நீட் தேர்வில் 720க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவியர்களோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் கலந்துகொண்ட ஒரு மாணவரின் பெற்றோர் ஒருவர் , ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நீட் விலக்கு மசோதா பற்றி கேள்வி எழுப்பினார். தங்கள் பிள்ளைகளை நீட் தேர்வுக்கு தயார்படுத்த தனியாக பணம் செலுத்தி பயிற்சி மையம் அனுப்ப இயலாத சூழலை தவிர்க்க தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்திடுவீர்கள் என கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒரு போதும் கையெழுதிடமாட்டேன். அது மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடும் செயலாகும். பயிற்சி மையத்திற்கு சென்று தான் நீட் தேர்ச்சி பெற வேண்டும் என்றில்லை. நீட் வந்த பிறகு தான் ஏழை மாணவர்களும் எளிதாக மருத்துவம் படிக்கும் சூழல் உருவாகி உள்ளது என தெரிவித்தார்.
