3.01 மீட்டர் தலைமுடி.., லிம்கா புத்தகத்தில் இடம்பெற்ற அகன்க்ஷா யாதவ் ..!

3.01 மீட்டர் தலைமுடிமுடி நீளம் கொண்ட அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் அழகு நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் என கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் தலைமுடியை வளர்க்க விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் பிற வகை பொருட்களைப் பயன்படுத்திய பிறகும், அவர்களின் பிரச்சனை அப்படியே உள்ளது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் அகன்க்ஷாவின் தலைமுடிமுடியின் நீளம் 3.01 மீட்டராகும். அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது இந்த சாதனையின் காரணமாக அவரது பெயர் லிம்கா புத்தகத்தில் 2020-2022 இல் சேர்க்கப்பட்டது. லிம்கா புத்தகத்தின் 30-வது பக்கத்தில் அகன்க்ஷா யாதவின் பெயர் மிக நீண்ட முடி கொண்ட பெண் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
நீளமான கூந்தலுக்கு பெயர் பெற்ற அகன்க்ஷா யாதவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர். அகன்க்ஷா தனது நீண்ட கூந்தலுக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இதுவரை சொன்னது இல்லை. அகன்க்ஷா தனது தலைமுடியைக் கழுவுவதற்கும், பராமரிப்பதற்கும் ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கவில்லை என்று மட்டுமே கூறுகிறார்.
தலைமுடியை எப்போதாவது வெட்டி உள்ளீர்களா..? என்று கேட்டபோது, ’இடுப்பில் இருந்து தரையில் தொங்கும் முடியை ஒரு முறை நான் வெட்டினேன் என்று அகன்க்ஷா கூறினார்.