பைக் திருட்டு வழக்கில் மும்பையில் 3 பேர் கைது – 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல்!

மாநிலங்களுக்கிடையேயான பைக் திருட்டு வழக்கில் நவி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. திருடர்கள் எப்படி நவீன முறையில் யோசித்து திருடுகிறார்களோ அதேபோல திருடர்களை பிடிப்பதற்காக காவலர்களும் நவீன முறையில் யோசித்து தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு யுக்திகளை கையாண்டு திருடர்களை வெற்றிகரமாக பிடித்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்வதில் காவலர்களின் பங்கு தற்போது மிக சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் நவிமும்பை பகுதியில் மாநிலங்களுக்கிடையேயான திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி, தீவிர பரிசோதனை மேற்கொண்ட காவல்துறையினர் இவர்களிடமிருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் திருட்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த 64 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் மொபைல் நம்பர்களை கண்டறிந்து அதன் மூலம் தான் குற்றவாளிகளை கண்டறிந்துதாகவும், அதுபோல அதை வைத்துதான் பைக்குகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தாத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025