ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை...!

3 militants shot dead by security forces in Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை.

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர்,  அந்த பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த மூன்று லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.